லாவண்டர் புடவையில் பூத்துக்குலுங்கும் லொஸ்லியாவின் புதிய புகைப்படங்கள்!
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லொஸ்லியா , தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகளைப் பெற்று, வெற்றிப்படிகளைச் செதுக்கிக்கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததுமே இவர் கமிட்டான முதல் திரைப்படம் ‘ப்ரெண்ட்ஷிப்’. ஆக்ஷன் கிங் அர்ஜுன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நகைச்சுவை நடிகர் சதீஷ் எனப் பல பிரபலங்களோடு இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது லொஸ்லியா எடுத்திருக்கும் புதிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைராலாக வலம் வருகின்றது. இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.
இப்படியே போய்க் கொண்டிருந்தால் வெள்ளித்திரையிலும் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதை இவருடைய ரசிகர்கள் இப்போது நிரூபித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் எப்போது வெள்ளித்திரையில் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தொடர்ந்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களைப் பார்க்கும்போது ஆறுதலாக இருந்தாலும், இவர் நடித்து இன்னும் திரைப்படங்கள் வெளியாகவில்லை என்று கொஞ்சம் வருத்தத்தில் தான் இருக்கின்றனர்.