பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய புதிய நடவடிக்கை
இலங்கைப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 5 ஆவது இடத்தில் உள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சை சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12 அதிநவீன கோல்போஸ்கோபி (coboscopy) இயந்திரங்கள் அரச மருத்துவமனை கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது அநுராதபுரம், யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மருத்துவமனைகளில் இந்த இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆறு இயந்திரங்கள் எதிர்வரும் மாதம் பொருத்தப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்திற்காக 72 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டத்திற்காக மேலும் 42 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.