ஹோர்முஸ் நீரிணைக்கான புதிய கடல் வழிப்பாதை; உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு!
உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணைக்குஅமைவாகப் புதிய கடல் வழிப்பாதை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இரண்டு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய பாதையை அமைப்பதில் உடன்பாட்டை ஏற்படுத்தி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இரண்டு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய பாதை
ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது தற்போதுள்ள வடக்கு அல்லது தெற்குப் பாதையாக இல்லாமல், இரு நாடுகளின் இறையாண்மையையும், ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் அமையும் என்றும் ஈரானிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் நுகரப்படும் மசகு எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியே கொண்டு செல்லப்படும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.