இன்று முதல் மேல் மாகாணத்தில் ஒரு புதிய சிகிச்சைமுறை!
மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் நோய் நிலைமைக்கு அமைய சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்புதல் அல்லது வீட்டினுள் வைத்துப் பராமரிப்பதற்காக இன்று முதல் புதிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையானது குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி ஆகிய இரண்டு முறைகளைக் கொண்டுள்ளது.
அதன்படி, மேல் மாகாணத்தினுள் புதிய முறைமை செயற் படுத்தப்படவுள்ளதாக கொரோனா தொற்று பரவலைக் கட்டுப் படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித் துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் சுவாச பிரச்சினை காணப்படுபவர்களானால் A என்ற எழுத்தை ஆங்கிலத்தில் பதிவு செய்து வயது - அடையாள அட்டை இலக்கம் மற்றும் முகவரியைக் குறிப்பிட்டு 1904 இலக்கத்திற்குக் குறுஞ்செய்தியில் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தொற்றாளர்கள் காச்சல் நிலையில் காணப்பட்டால் B என்ற எழுத்தை ஆங்கிலத்தில் பதிவு செய்தும் , எந்த நோய் அறிகுறியும் இல்லாமல் காணப்படும் கொரோனா தொற் றாளர்கள் C என்ற எழுத்தை ஆங்கிலத்தில் பதிவு செய்தும் குறித்த விடயங்களைப் குறுஞ்செய்தியில் அனுப்பவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குறுந்தகவல் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வீட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களுடன் 247 என்ற ஹொட்லையின் இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு அவர்களின் நோய் நிலைமையை அறிந்து அவர்கள் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் 1390 என்ற இலக்கத் துடன் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கப்படும் என சுகா தார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.