கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் நியமனம்!
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது துணை வேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஜெனரல் சர் ஜோன் நேற்றையதினம் (01.09.2023) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதற்கிடையில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், புதிதாக நியமிக்கப்பட்ட வி.சி.யிடம் நியமனத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவுக்கு இராணுவ மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது.
கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர் முப்படை அதிகாரிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருடன் பட்டதாரிகள் கற்கைகள் பீட கேட்போர் கூடத்தில் உரையாற்றினார்.
ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பதவியேற்கும் முன்னர், கிழக்கு கடற்படைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படையின் கட்டளைத் தளபதியாக தனது கடமையாற்றிக்கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கதாகும்.