இலங்கையில் அமுலாகிறது புதிய விலங்கு நலச் சட்டம்!
நாட்டில் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ள விலங்கு நல சட்டமூலம் அமைச்சரவையின் அனுமதிக்காக இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
விவசாய கால்நடை அமைச்சினால், அமைச்சரவைக்கு இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.பி.விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்திற்கு சுற்றாடல் அமைச்சின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதற்கமைய புதிய சட்டமூலத்தை வன ஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தயார் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
மிருகவதைக்கு எதிராக குரல் கொடுக்கும், விலங்கு நல அமைப்பினால் புதிய சட்டமூலத்திற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயத்தை விலங்கு நல அமைப்பின் உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.