தினமும் காலை இந்த விஷயங்களை மட்டும் மறந்தும் கூட செஞ்சுடாதீங்க ; குறிப்பா நீரிழிவு உள்ளவர்கள்
நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் செய்யும் இந்தவிஷயங்கள், உங்கள் நாளை மோசமாக்குகிறது என்றால் நம்ப முடிகிறதா?
அத்தகைய விஷயங்கள் என்னென்ன என இந்த பதிவில் பார்க்கலாம்.

பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கம்
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது தவறான பழக்கம். காஃபி, உடலில் கார்டிசால் அளவை அதிகப்படுத்தி வளர்சிதை மாற்றங்களை மந்தப்படுத்தும். இதனால் அந்த நாள் சோர்வாக மாறிவிடும். காஃபிக்கு பதிலாக தண்ணீர் அருந்துவது நல்லது.
பெட் காஃபி மிகவும் மோசமான பழக்கம். ஏனெனில் காஃபியிலுள்ள அசிடிக் தன்மை பற்களில் படிந்துவிடும். இதற்குப்பின் பல் துலக்கும்போது, பற்களின் எனாமல் மோசமடையக்கூடும்.

காலை உணவில் கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக நீரிழிவு, நீரிழிவுக்கு முந்தைய நிலை பாதிப்புள்ளவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். புரதச்சத்தும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதே நல்லது. இது இல்லாதபட்சத்தில்தான் சாப்பிட்டு சில மணி நேரத்திலேயே மீண்டும் ஜங்க் ஃபுட் சாப்பிட வேண்டும் போல இருப்பது.
சத்து மாத்திரை சாப்பிடுவோர், வெறும் வயிற்றில் மாத்திரை உட்கொள்ளக்கூடாது. குறிப்பாக வைட்டமின் F, A, D, E, K போன்றவை உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ள வேண்டியவை. மாத்திரைகளை, மருத்துவர்கள் பரிந்துரைத்த நேரத்தில் - பரிந்துரைத்தபடி உட்கொள்ளவும்.

காலை எழுந்தவுடன் மொபைல் பார்ப்பது மிக மோசமான பழக்கம். இரவு நன்றாக தூங்கி எழுபவர்கள்கூட, காலையில் எழுந்தவுடன் மொபைல் பார்ப்பதன் மூலம் அவர்களின் மூளை மந்தமாகிவிடும். நம்மில் பலரும் தூக்கத்தின்போதுதான் மூளை ஓய்வெடுக்கிறது என நினைக்கிறோம். ஆனால் தூக்கத்தின்போது மூளை சுறுசுறுப்பாக உடலை பார்த்துக் கொள்கிறது. மூளைக்கு ஓய்வென்பது, சுயநினைவில் நாம் மனதை அமைதியாக வைத்து தியானம் செய்யும்போதுதான். எனவே அன்றாடம் மூளைக்கு கொடுப்பது நல்லது.