நாடாளுமன்றம் வந்த நாகப் பாம்பால் பரபரப்பு
நாடாளுமன்ற வளாகத்தின் போக்குவரத்து அலுவலகம் அருகே ஒரு நாகப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின் உதவி இயக்குநர் (நிதி) ரோஹித பத்மசிறி முதலில் அந்த நாகப்பாம்பைக் கண்டார்.
கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. அன்று மாலை பணியில் இருந்த அவர், நாகப்பாம்பைக் கண்டதும் உடனடியாக நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.
காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்
அதன்படி, அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் நாகப்பாம்பைப் பிடித்து காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று வீசியதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
தியவன்னாவ நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள காட்டில் இருந்து பல்வேறு வகையான நாகப்பாம்புகள், விரியன் பாம்புகள் உட்பட நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து நீண்ட நாட்களாகிவிட்டன.
அதேவேளை முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பல பாம்புகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து வனப்பகுதிகளுக்கு எடுத்துச் சென்று வீசினர்.