நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; காணாமல் போன துப்பாக்கி மீட்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலின் போது காணாமல் போன ‘ரிப்பீட்டர்’ (Repeater) வகை துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை வளாகத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடுதல் நடவடிக்கையின் போதே, துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாகத் திணைக்களம் உறுதிப்படுத்தியது. கடந்த ஜூலை 6 ஆம் திகதி சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போதே, இந்த ஆயுதம் காணாமல் போயிருந்தது.

கைதிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள்
இதேவேளை, சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளைத் தங்க வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
காணாமல் போன ஆயுதம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளும் தொடர்கின்றன. இலங்கை சிறைச்சாலைகளில் தற்போதைய கைதிகளின் எண்ணிக்கை அதன் கொள்ளளவை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து பழைய மற்றும் பயன்படுத்தப்படாத சிறைச்சாலை வளாகங்களைச் சீரமைத்து, கைதிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.