14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான சிறைச்சாலை கலவரம் ; பிரித்தானிய பெண் கைதி நிலமை என்ன!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும் இன்றும் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மிக மோசமான மோதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் உயிரிழ்ப்பு 30 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 வயதுடைய பிரித்தானிய பெண் கைதியான ஷார்லட் மே லீ (Charlotte May Lee) முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான கலவரம்
பாங்காக்கிலிருந்து இலங்கை வந்த இவரது பைகளில் 46 கிலோகிராம் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, மே 2025 இல் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறை , இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.