ரொனால்டோவுக்கு இதுவே கடைசி ; ரசிகர்கள் கவலை!
உகளவில் பிரபல்யமான போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரமான 41 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக் கிண்ண தொடராகும்.
போர்த்துக்கல் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ இணைந்து நடத்தும் 2030 உலகக் கிண்ணத்தில் தான் விளையாடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளமை அவரது ரசிகர்களுக்கு கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து 6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர்
தொடர்ந்து 6 உலகக் கிண்ண தொடர்களில் விளையாடி, அவை அனைத்திலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த உலகக் கிண்ணத்தில் அவர் இதுவரை 3 கோல்களை அடித்துள்ளார்.
போர்த்துக்கல் அணி அடுத்ததாக டல்லாஸில் நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினை எதிர்கொள்கின்றது. உலகக் கிண்ணத்தோடு விளையாடுவதை நிறுத்திக்கொண்டாலும், கால்பந்திலிருந்து முற்றிலும் ஓய்வு பெறுவது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
இருப்பினும், நீண்ட கால்பந்து வாழ்க்கைக்கு விமர்சனங்களைக் கடந்து இரசிகர்களின் அன்பு மற்றும் விளையாட்டின் மீதான பேரார்வத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், எதற்கும் அஞ்சாமல் தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளதால் தெளிவான மனசாட்சியுடன் இருப்பதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.