நிதி சேகரிப்புக்காக போராட்டத்தை மலினப்படுத்தும் பழ.நெடுமாறன்!
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்தார் என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
போராட்டத்தை மலினப்படுத்தும் செயல்
தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்பணித்த தம்பி பிரபாகரணை இவ்வாறு பொது வெளியில் பொய்யான கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் என்றும் சித்தார்த்தன் தெரிவித்தார்.
மேலும் இந்த அறிவிப்பு வெறுமனே நிதி சேகரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மூத்த அரசியல்வாதியான பழ.நெடுமாறன் அணமையில் விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.