சூர்யாவுக்கு வில்லனாகும் நயன்தாராவின் தம்பி! பாரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு இம்மாதத்தின் இரண்டாம் வாரத்தில் சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரத்தைப் பற்றிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இளம் நடிகர் சரண் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இதற்கு முன் மணிரத்தினத்தின் கடல் படத்தில் கௌதம் கார்த்திக்கின் சிறுவயது கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் சரண் நடித்திருப்பார். அதேபோல் தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தம்பியாகவும் சரண் நடித்துள்ளார்.
இதைப்போல் அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் சரண் தனது அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.