84 ஆண்டுகளுக்கு பின் சுக்கிரன் உருவாக்கும் நவபஞ்ச ராஜயோகம் ; ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள்
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அவ்வாறு ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் கிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார்.
அந்த வகையில் அக்டோபர் 09 ஆம் திகதி சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன். சுக்கிரன் கன்னி ராசியில் பயணிக்கும் போது யுரேனஸ் உடன் சேர்ந்து அக்டோபர் 14 ஆம் திகதி நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.
சுக்கிரன் மற்றும் யுரேனஸால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். செல்வம் குவியும். நீண்ட கால சவால்கள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகளும், கருத்து வேறுபாடுகளும் முடிவுக்கு வரும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் யுரேனஸால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் வாழ்வில் பல அம்சங்களில் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக ஆடம்பரமான பொருட்களை வாங்கலாம். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக வாழ்க்கையில் சந்தித்த தடைகள் நீங்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் யுரேனஸால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் வெற்றிகள் குவியும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.