உடலுக்கு நன்மை தரும் இந்த நாவல் பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
வருடத்தில் குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கும் பழங்களில் ஒன்று நாவல் பழம். இந்தப் பழத்தில் நம் உடலுக்கு நன்மை தரும் பல சத்துகள் உள்ளது. இந்தப் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
நாவல் பழம் குறைவான க்ளைசைமிக் குறியீடு கொண்டது. மேலும் இதில் ஜம்போலின் என்ற கலவை உள்ளது. இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாறுவதை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக நம்முடைய ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது.
செரிமான ஆரோக்கியம்
நாவல் பழத்தில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. ஆகையால் நாவல் பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுவதோடு மலச்சிக்கல் வராமலும் தடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மலம் எளிதாக வெளியேறவும் நாவல் பழம் உதவுகிறது.
ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்தது
ஆந்தோசனினின், ஃப்ளாவோனாய்ட், பாலிபீனால் போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் நாவல் பழங்களில் அதிகமாக உள்ளது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தங்களை கட்டுப்படுத்தி, நாள்பட்ட நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
நாவல் பழத்தில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும். இதன் மூலம் தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடும் வலுவை உடல் பெறுகிறது.
சரும ஆரோக்கியம்
நாவல் பழத்தில் அதிகமான ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளதால், ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பிற்கு எதிராக பாதுகாத்து சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. இது சருமத்திற்கு இளமையான தோற்றத்தையும் பளபளப்பையும் தருகிறது.
உடல் எடை பராமரிப்பு
நாவல் பழத்தில் குறைவான கலோரிகளும் அதிகமான நார்ச்சத்தும் உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தங்கள் டயட்டில் தாராளமாக இந்தப் பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இதை சாப்பிட்டதும் வயிறு நிறைந்த திருப்தி கிடைப்பதால் அதிமான கலோரிகள் உட்கொள்வதை தடுக்கிறது.