UV கதிர்வீச்சிலிருந்து முடியை காக்கும் இயற்கை எண்ணெய்
முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாதாம் எண்ணெய், UV சேதத்திலிருந்து பாதுகாப்பதோடு முடி உடைதலை குறைக்க உதவுகிறது. இதை எப்படி சரியாக பயன்படுத்துவது மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
பாதாம் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள், கூந்தலை சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து பாதுகாக்க செய்கிறது.

மேலும், Emollient ஆக செயல்பட்டு, கூந்தலை மென்மையாக்குவதோடு வறண்ட கூந்தலை ஈரப்பதமாக்கிறது.
இத்துடன் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து முடி உடைவதை குறைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதாம் எண்ணெய் நேரடியாக முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை.
ஆனால், முடி உடைவதை தடுத்து, ஆரோக்கியமாக வைப்பதன் மூலம் முடி நீளமாக வளர உதவுகிறது.

பாதாம் எண்ணெய் யார் வைக்கலாம்?
வறண்ட மற்றும் சிக்கு முடி கொண்டவர்கள், நுனி முடி பிளவு இருப்பவர்கள், சுருட்டை முடி இருப்பவர்கள், கரடுமுரடான மேற்பரப்பு கொண்டவர்கள் பாதாம் எண்ணெயை பயன்படுத்த செய்யலாம்.
எண்ணெய் பிசுபிசுப்பு கூந்தல் மற்றும் நட்ஸ் அலர்ஜி இருப்பவர்கள், பாதாம் எண்ணெய் பயன்பாட்டை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உச்சந்தலையில் தொற்று அல்லது கடுமையான பொடுகு பிரச்சனை இருந்தாலும் தவிர்ப்பது நல்லது.
உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள் முதலில் சிறிது இடத்தில் தடவி Patch Test செய்துகொள்வது சிறந்த முடிவாகும்.
முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாக பாதாம் எண்ணெய் கருத முடியாது. ஆனால், முடி உடைதலை தடுத்தல், முடியை மென்மையாக்குதல் என ஒட்டுமொத்த முடி மேற்பரப்பை மேம்படுத்த சிறந்த தேர்வாக திகழ்கிறது.
தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் நீங்கள் எதிர்பார்த்த பலனை காண முடியும்.
