நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட நாசா!
கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது.
நாசா 2022-ம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது.
ரூ.75 ஆயிரம் கோடி செலவில் செலுத்தப்பட்ட இந்த தொலைநோக்கியானது பிரபஞ்சத்தின் பிறப்பிடம் குறித்த நான்கு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.
இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இந்த புகைப்படங்களே பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சியாக உள்ளன.
அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை நாசா தற்போது கொண்டாடி வருகிறது.
Here it is: @NASAWebb’s one-year anniversary image. Called Rho Ophiuchi, this area shows about 50 young stars in a cocoon of gas and dust. At 390 light-years away, it's the closest star-forming region to Earth: https://t.co/A3e2XLx9Ef
— NASA (@NASA) July 12, 2023
Webb continues to #UnfoldTheUniverse. pic.twitter.com/tfXT8J2xBW
அதன் ஒருபகுதியாக மேலும் ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படம் ரோ ஒபியுச்சி மேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை காட்டுகிறது.
இதில் சுமார் 50 இளம் நட்சத்திரங்கள் உள்ளன. அவை அனைத்தும் சூரியனை போன்ற நிறை உடையவை என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
