நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனக்கிற்கு செய்த செயல்! இப்போ பிரதமர் பதவி
இந்தியாவை 200 ஆண்டுகளாக ஆண்டு வந்த பிரித்தானிய நாட்டைத் தற்போது ஒரு இந்தியர் ஆளப்போகிறார் என்பது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.
இந்த நிலையில் ரிஷி சுனக் (Rishi Sunka) மாமனாரான இந்தியாவின் மிகப்பெரிய IT சேவை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இன்போசிஸ் துணை நிறுவனரான நாராயணமூர்த்தி மருமகனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்-ன் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை இன்போசிஸ் நாராயண மூர்த்திப் பெரிய உதவி செய்து தீர்த்து வைத்தது மறக்க முடியாது.
இன்போசிஸ் நாராயணமூர்த்தி வாழ்த்து
வாழ்த்துக்கள் ரிஷி. ரிஷி சுனக்-ஐ கண்டு நாங்கள் பெருமை கொள்கிறோம், அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
பிரித்தானிய மக்களுக்கு அவர் தன்னால் முடிந்ததைக் கண்டிப்பாகச் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம் என மருமகன் ரிஷி சுனக்-கிற்கு இன்போசிஸ் நாராயணமூர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
அக்ஷதா மூர்த்தி
பிரித்தானிய நாட்டில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆட்சி இருக்கும் போது, ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி (இன்போசிஸ் நாராயணமூர்த்தி-யின் ஓரே மகள்) ஆகியோர் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இது மட்டும் அல்லாமல் போரிஸ் ஜான்சன் தலைமையிலான நிர்வாகக் குழு (ரிஷி சுனக் உட்பட) அபராதம் பெற்றது.
போரிஸ் ஜான்சன் ஆட்சி
போரிஸ் ஜான்சன் ஆட்சி தடுமாறி வந்த நிலையில் ரஷ்ய - உக்ரைன் போர் மிகப்பெரியதாக வெடித்தது, இதில் ரஷ்யா-வுக்கு எதிராக அமெரிக்கா உடன் பிரித்தானியாவை சேர்ந்து பொருளாதார, வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் தான் அப்போதைய பிரித்தானிய நிதியமைச்சரான ரிஷி சுனக் குடும்பம் மாட்டிக்கொண்டது.
ரஷ்யாவில் இன்போசிஸ்
இந்த நிலையில் தான் எதிர்கட்சியின் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் ரஷ்யாவில் இன்போசிஸ் செய்யும் வர்த்தகம் மூலம் பெரிய அளவில் பலன் அடைந்து வருவதாகக் குற்றம்சாட்டினர், இதேவேளையில் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தித் தான் பெரும் வருமானத்திற்குப் பிரித்தானிய நாட்டில் வரி செலுத்தாமல் ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இன்போசிஸ் எடுத்த முடிவு
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி-க்கு உதவ வேண்டும் என்பதற்காக இன்போசிஸ் நிர்வாகம் தனது ரஷ்ய வர்த்தகத்தை முழுமையாக மூடுவதாகவும், அந்நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்தது. இன்போசிஸ் நிர்வாகத்தின் முடிவுக்குப் பின்னால் நாராயணமூர்த்தி உள்ளார் எனப் பல கருத்துக்கள் அக்காலகட்டத்தில் வெளியானது.
ரஷ்யா
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா - ரஷ்யா மத்தியில் வர்த்தகம் அதிகமானது தவற குறையவில்லை. இதேபோல் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யாவில் இருந்து வெளியேறிய ஓரே நிறுவனம் இன்போசிஸ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி-யிடம் இன்போசிஸ் பங்குகள் உள்ளது, இதன் மூலம் டிவிடெண்ட் முதல் பல்வேறு வருமானத்தைப் பெற்று வருகிறார்.
நாராயணமூர்த்தி உதவி
மருமகன் ரிஷி சுனக்-கிற்காக மாமனார் செய்த உதவி சாதாரணமானது இல்லை, மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து வெளியில் கொண்டு வர இன்போசிஸ் ரஷ்ய வர்த்தகத்தை மூடியது முக்கியமானது (நாராயணமூர்த்தி உதவி முக்கியமானது). இன்று பிரித்தானிய நாட்டில் 2வது முறையாக வெளிநாட்டைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராகி உள்ளார்.