குடை சாய்ந்த முச்சக்கரவண்டி... இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (17-06-2024) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நானு ஓயாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணம் மேற்கொண்டு மிகவும் சரிவான ரதல்ல குறுக்கு வீதியில் அபாயகரமான வளைவில் முச் சக்கரவண்டிச் சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததன் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.