திடீரென லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு... அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (21-12-2024) இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது லொறியில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.