பிக் பாஸ் வீட்டில் துயரத்தைக் கொட்டிய நமீதா மாரிமுத்து....கதறி அழுத்த சக போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 5 கடந்த 2ம் திகதியன்று மிகவும் பிரமாண்டமாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நிலையில் பிக் பாஸில் இன்றைய வாரத்திற்கான டாஸ்க்காக போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த துயரப்பாதையைப் பற்றி பேசி வந்தனர்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் திருநங்கையாக பங்கேற்ற நமீதா மாரிமுத்து தனது துயரத்தினை கூறினார்,
அதில் அவர் கூறியதாவது,
நமது வாழ்க்கையில் என்ன குறைகள் இருந்தாலும் அதனை ஏற்றுகொண்டு வாழணும்னு எங்க அம்மா சொல்லுவாங்க. இப்படி சொன்ன எங்க அம்மா தான் நான் இப்படி மாறியதை ஏற்றுக்கொள்ளாமல் என்னை அடித்து உதைத்து ஏற்க மறுத்தார்.
அதுமட்டுமின்றி சமூகமும் திருநங்கைகள் பிச்சையெடுப்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாவும் பார்ப்பதற்கு ஒவ்வொரு திருநங்கைகளின் பெற்றோர் தான் காரணம் என கூறினார் .
இவரது உணர்ச்சிபூர்வமான பேச்சைக் கேட்டு சகா போட்டியாளர்கள் கதறி அழுதனர். இவரது பேச்சின் வாயிலாக இவர் எப்படிப்பட்ட துயரங்களை கடந்து வந்துள்ளார் என தெரியவந்தது.
