நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலை; கடும் பாதுகாப்பு
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல்
குறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியிருந்தார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.