நாமல் ராஜபக்ஷவின் கனவு மீளவும் கலைந்துவிட்டது!
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வரான , இளவரசர் நாமல் ராஜபக்ஷவின் கனவானது ஐஸ்லாந்தில் மீண்டும் கலைந்துள்ளது என்பதையே அரசுக்கு எதிரான நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நுகேகொடைக் கூட்டத்தை குழப்புவதற்கு ஆளுங்கட்சி சதி செய்தது என்று கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.

வங்குரோத்து அடைந்தவர்களுக்கு மீள உயிர்கொடுக்க முடியாது
உண்மையில் நுகேகொடை கூட்டத்துக்கு அரசு எவ்வித இடையூறும் செய்யவில்லை. இளவரசர் நாமல் ராஜபக்ஷவின் கனவானது ஐஸ்லாந்தில் மீண்டும் கலைந்துள்ளது என்பதையே நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
ரணில், மஹிந்த போன்றவர்களை மக்கள் விரட்டியடித்தனர். எனவே, அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்தவர்களுக்கு மீள உயிர்கொடுக்க முடியாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.