சிறைக்கு சென்ற ரணில் விக்ரமசிங்கவிற்காக நாமல் ராஜபக்ச வெளியிட்ட தகவல்
அன்று வன்முறையை கையில் எடுத்த ஜேவிபி அரசாங்கம், ஆட்சி அதிகாரத்தையும் அவ்வாறே பயன்படுத்துகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு உரிமை உண்டு
அவர் மேலும் கூறுகையில் “இச் சம்பவம் ஜேவிபி அரசாங்கத்தின் நிர்வாகம் தொடர்பிலான கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு உரிமை உண்டு ஆனால், அரசியல் பிரசாரத்திற்காக அதனை செய்வது பெரும் தவறு ”எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.