CID இல் இருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்ச
இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர், சற்று நேரத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து (CID) வெளியேறினார்.
பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கெஹெல்பத்தார பத்மே’ உடனான தனது தொடர்புகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

நாமல் ராஜபக்சவுக்கு இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்ததால் புதிய திகதி கோரியதாகவும், அதன் பின்னரே இன்றைய அழைப்பாணை விடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.