தென்கொரிய ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு நாமல் பாராட்டு
புலம்பெயர் இலங்கை பணியாளர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டமைக்காக தென் கொரிய ஜனதிபதி லீ ஜே மியுங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராட்டியுள்ளார்.
இது புலம்பெயர்ந்தோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நேர்மறையான மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில்,
இதனை குறிப்பிட்டுள்ள அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளையும் வலியுறுத்தியுள்ளார்.
தென் கொரியாவின் நாஜுவில் உள்ள தொழிற்சாலையொன்றில் இலங்கை பணியாளர் ஒருவர் ஃபோர்க்லிஃப்ட் மூலம் கட்டி வைக்கப்பட்டு நகர்த்தப்பட்டதைக் காட்டும் காணொளியொன்று அண்மையில் வெளியானது.
கடந்த பெப்ரவரி மாதம், மற்றொரு இலங்கை பணியாளரால் பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படும் இந்த காட்சிகள் தென்கொரிய மனித உரிமை ஆர்வலர்களால் அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்தே குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி லீ ஜே மியுங் உத்தரவிட்டிருந்தார்.