வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் வெளியிட்ட கருத்து
வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் குறித்து, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதற்றமடையத் தேவையில்லை என்று பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குற்றம், மோசடி மற்றும் ஊழல் குறித்தும் அரசாங்கம் முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும்.
எனவே, நாமல் ராஜபக்ஷ அல்லது வேறு யாரும் பதற்றமடையத் தேவையில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தாஜுதீனின் மரணம் குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அவரது மரணத்திற்குப் பின்னால் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருப்பதாகப் பல ஆண்டுகளாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில், தற்போது விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு வருகின்றன என்றும் பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.