நல்லூர் கந்தனின் பூங்காவனத் திருக்கல்யாணக் காட்சி!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு பூங்காவன திருக் கல்யாண வைபவம் இன்றைய தினம் (15.09.2023) மாலை வேளையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
நல்லூரானின் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த (21.08.2023) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் திருவிழா இடம்பெற்று இன்று (15.09.2023)திருமாங்கல்யதருணம் சிறப்பாக இடம்பெற்றது.
வசந்த மண்டபத்தில் அலங்கார வேலன்,வள்ளி, தெய்வானை, ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் திருமாங்கல்ய தருணம் கிரியைகள் இடம்பெற்று மாலை 05.20 மணியளவில் வசந்த மண்டபத்தில் வேத பாராயணங்கள் ஓத,மேளதாள வாத்தியங்கள் இசைக்கப்பட்டு சிவாச்சாரியரினால் திருக்கல்யாண திருமாங்கல்யம் கட்டப்பட்டது.
பின்னர் எம்பெருமான் சமேதரராக உள்வீதியுடாக வலம் வந்து திருக்கல்யாண திருமனையில் வீீற்று வெளிவீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.