வனப்பகுதியில் மர்ம துப்பாக்கிச் சூடு ; நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்த விவசாயி
அநுராதபுரத்தில் மதவாச்சி - கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மதவாச்சி - துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த விவசாயி துப்பாக்கி சூட்டிற்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்க சென்றபோது, உயிரிழந்துள்ளார்.
குறித்த விவசாயி கரம்பன்குளம் வனப்பகுதிக்கு அருகில் மருதாணி பயிரிட்டு வந்த நிலையில், விவசாய நோக்கங்களுக்காக வனப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருக்கலாம் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.