யாழில் மிரட்டும் மர்ம காச்சல்; மேலும் ஐவர் பாதிப்பு; மக்களே அவதானம்
யாழ்ப்பாணம் வரணியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாதிரிகள் சோதனை
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எலிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரணியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாகியதால் , அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக அஞ்சப்படுவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.