மர்மமாக உள்ள அமெரிக்க அதிகாரி ; தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள அமெரிக்கப் படைகள்
தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) ரக போர் வானூர்தி கடந்த வெள்ளிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது.
குறித்த வானூர்தியிலிருந்த இருவரில் ஒருவர் அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டுள்ளார்.
எனினும், அவரை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தியின் மீது ஈரானின் நாடோடிப் பழங்குடியினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பணியாளர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் மற்றுமொரு A-10 வர்தாக் வானூர்தியும் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதன் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல்களுக்கு ஈரானின் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளே காரணம் என ஈரானிய இராணுவத் தலைமை தெரிவித்துள்ளது.
அமெரிக்க விமானப் படை வீரர்களை உயிருடன் பிடிப்பவர்களுக்கு சுமார் 50,000 பவுண்டுகள் (66,100 டொலர்) சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E விமானத்திலிருந்த ஆயுதப் பிரிவு அதிகாரிக்கு (Weapons Officer) என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த பாரிய இழப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.