ஈரானின் பிடியில் அமெரிக்க விமானிகளா? ; வான் பரப்பில் சம்பவம் செய்த ஈரான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் நாளுக்கு நாள் வேறொரு பரிமாணத்தை நோக்கி செல்லும் நிலையில், நேற்றைய தினம் ஈரான் அமெரிக்காவின் முக்கிய F-15 Eagle ரக போர் விமானம் உள்ளிட்ட இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15 Eagle விமானத்தின் விமானியை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஈரான், குறித்த விமானியை கண்டுபிடித்தால் தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த சம்பவங்கள் தொடர்பாக தகவல் பெறப்படுவதாகவும், அதனால் பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.