மியன்மார் பேரழிவுக்கு ஆட்சியாளர்களின் கெட்ட சகுனமே காரணம்!
மியன்மார் பூகம்பம் அந்த நாட்டின் இராணுவ ஆட்சியினருக்கான கெட்ட சகுனம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் என பிரிட்டனின் பிரபபல ஊடகமான டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.
மியன்மார் பூகம்பம் தொடர்பில் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது. சகுனங்கள் கட்டுக்கதைகள் நிறைந்த நாடான மியன்மாரில் வெள்ளிக்கிழமை பேரழிவை ஏற்படுத்திய பூகம்பம்,ஆளும் இராணுவத்தின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டமைக்கான கெட்ட சகுனம் என பலரும் தெரிவித்துள்ளனர்.
நய்பிடாவில் பேரழிவு
வியாழக்கிழமை மியன்மார் இராணுவத்தின் இராணுவ ஆட்சியின் வலிமையை காண்பிக்கும் விதத்தில் இராணுவஅணிவகுப்பொன்றை நடத்தினார்கள்.
இதற்கு மறுநாள் நிலநடுக்கம் காரணமாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, தலைநகரும் இராணுவ ஆட்சியாளர்களின் கோட்டையான நய்பிடாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
பலர் இதனை மிகவும் தெளிவான செய்தி என தெரிவிக்கின்றனர். சிலவேளைகளில் ஈவிரக்கமற்ற தன்மை மனிதர்களால் தாங்கமுடியாத எல்லையை அடையும்போது,நீதி சாத்தியமற்று போகும்போது இயற்கை பொறுப்பேற்கும், என ஓய்வுபெற்ற குடிவரதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது இராணுவ ஆட்சியாளர் மின்ஒன்ஹிலாங்கிற்கு தண்டனை கிடைக்கவுள்ளது என்பதற்கான அறிகுறி எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை நான்கு வருடங்களிற்கு முன்னர் மின் ஒன் ஹிலாங் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றினார்.
இதன் பின்னர் மூண்டுள்ள உள்நாட்டு போரினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன் , மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
சகுனங்களில் நம்பிக்கை
இந்த பூகம்பம் மக்களின் துயரங்களை மேலும் மோசமானதாக்கப்போகின்றது. மியன்மார் மக்கள் மோசமான துன்பங்களை அனுபவித்துள்ளனர், நாங்கள் சகுனங்களை நம்புகின்றோம் என தெரிவித்த அவர்,
எப்போது துன்பம் நிகழ்ந்தாலும் நாங்கள் ஜோதிடரிடம் போவோம், என்றார். அதோடு மியான்மார் இராணுவ ஆட்சியாளரும் ஜோதிடத்தினை நம்புகின்றவர்,அவருக்கு விரைவில் ஆபத்து என நம்புகின்றேன் என குறிப்பிட்டார்.
இது இராணுவத்தினர் தங்கள் பலத்தை வெளிப்படுத்திய இராணுவதின அணிவகுப்பின் பின்னர் இடம்பெற்றுள்ளது,மேலும் இராணுவத்தின் அதிகார மையத்தை பூகம்பம் தாக்கியுள்ளது,
சகுனங்களில் நம்பிக்கை கொண்டுள்ள அதிகாரிகள் இதனை மோசமான சகுனமாக அர்த்தப்படுத்துவார்கள் என எதிர்பார்க்காமல் இருக்க முடியாது என சர்வதேச மன்னிப்புச்சபையின் மியன்மார் ஆராய்ச்சியாளர் ஜோ பிரீமன் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.