என் பிள்ளைகள் இந்த தொழிலுக்கு வந்துவிடக்கூடாது; செருப்பு தைப்பவரின் ஆதங்கம்!(Video)
என் பிள்ளைகள் இந்த தொழிலுக்கு வந்துவிடக்கூடாது என கொழும்பு கொட்டாஞ்சேனையில் 20 வருடங்களாக செருப்பு தைப்பவரின் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
நாட்டில் பல்வேறு தொழில்களை செய்துவரும் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவில் வசித்துவரும் இராமகிருஸ்ணர் எனும் செருப்பு தைக்கும் தொழிலாளை ஒருவர் வாழ்ந்து வருகின்றார்.
20 வருடங்களாக அவர் இந்த செருப்பு தைக்கும் தொலில் ஈடுபடு வருகின்றார். ஒரு காலத்தில் சவுதி நாட்டிற்கு வேலைதேடி சென்ற இடத்தில் அவர் இந்த தொழிலை பழகியதாக கூறுகின்றார்.
தான் 20 வருடமாக இந்த தொழிலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்தாலும் தனது பிள்ளைகள் இந்த தொழிலுக்கு வரக்கூடாது என அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
பெற்றோர்கள் எவ்வளவோ கஸ்ரப்பட்டு பிள்ளைகளை வளர்த்தாலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களைப்போல கஸ்ரப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.