இந்து மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்கள்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முப்பயநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட சித்திரகிரி பகுதியைச் சேர்ந்த 85 வயதான கல்யாணி அம்மா என்ற இந்து மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை, அவருடைய அயலவர்களாகவும் தன் மகன்களாகவும் பழகிய ரசாக் மற்றும் சுலைமான் என்ற இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் இந்து முறைப்படி செய்து வைத்தனர்.
கல்யாணி அம்மாவுக்கு சொந்த உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக ரசாக்கின் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். அவர்களின் குடும்ப விழாக்களிலும் கலந்து கொண்டுள்ளார் .

தன் இறுதிச் சடங்குகளை ரசாக்கும் சுலைமானும் செய்ய வேண்டும் என்று கல்யாணி அம்மா முன்பு விருப்பம் தெரிவித்திருந்தார் .
அவரது மறைவுக்குப் பிறகு, ரசாக் மற்றும் சுலைமான் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து இந்து முறைப்படி சிதையேற்றி இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர்.
மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்திற்கும் அன்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இச்சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.