இஸ்லாமிய இளைஞனுடன் காதல் வயப்பட்ட இந்துப்பெண் ; அரங்கேறிய கொடூர சம்பவம்
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர் இருவர் ஆணவக் கொலை' செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
பல ஆண்டுகளாக மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த கிராம மக்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண்வெட்டியால் கொடூரமாக அடித்துக் கொன்ற சகோதரர்கள்
உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது காஜல் (இந்து) மற்றும் 27 வயது முகமது அர்மான் (முஸ்லிம்) ஆகியோரது உடலங்கள், கடந்த ஜனவரி 21 ஆம் திகதி ஆற்றங்கரையோரம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
ஜனவரி 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு இடைப்பட்ட இரவில், அர்மான் தனது காதலியான காஜலைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
காதலர்கள் சந்தித்தபோது காஜலின் மூன்று சகோதரர்களும் அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர். ஆத்திரமடைந்த சகோதரர்கள், இருவரையும் மண்வெட்டியால் கொடூரமாக அடித்துக் கொன்றுவிட்டு, உடலங்களை இரகசியமாகப் புதைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலை செய்த பிறகு, குற்றத்தை மறைக்க முயன்ற சகோதரர்கள், அர்மான் தனது தங்கையைக் கடத்திச் சென்றதாக ஜனவரி 20 ஆம் திகதி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சகோதரர்களின் வாக்குமூலத்தில் காணப்பட்ட முரண்பாடுகளைக் கண்டறிந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தியபோதே உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்த பொலிஸார் , காஜலின் மூன்று சகோதரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 400 குடும்பங்கள் வாழும் உம்ரி கிராமத்தில் இதுவரை மத ரீதியான மோதல்கள் ஏற்பட்டதில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்ற நிலையில் காதலர்கள் கொடூர கொல்லப்பட்ட சம்பவத்தால் கிராமமே அதிர்ந்துபோயுள்ளது.
அதேவேளை இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 38 கௌரவக் கொலைகள் உத்தியோகபூர்வமாகப் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், , உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.