அடுத்தவாரம் இலங்கைக்கு வரும் முருகன் , ஜெயக்குமார், பயஸ்
முன்னாள் இந்திய ப்பிரதமர் ராஜீவ் காந்தி கலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள, முருகன் , ஜெயக்குமார், பயஸ் ஆகியோர் அடுத்தவாரம் இலங்கைக்கி அனுப்பிவைக்கப்படுவார்கள் என தமிழக அரசாங்கம் கூறியுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
முருகன் , ஜெயக்குமார், பயஸ் ஆகியோருக்கு தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகம் கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
அடுத்தவாரம் இலங்கைக்கு
இந்நிலையில் அடுத்தவாரம் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு கூறியுள்ளது.
அதேவேளை ராஜீவ் காந்தி கஒலை குற்றச்சாட்டில் கைதான சாந்தன் , தாயகம் வர காத்திருந்த வேளை சென்னையில் உயிரிழந்திருந்தமை சோகத்தை ஏற்பட்டுத்தியிருந்தது.
சாந்தனின் மரணத்தை அடுத்து எஞ்சிய மூவரையும் (முருகன் , ஜெயக்குமார், பயஸ்) இலங்கைக்கு உயிருடன் அனுப்பி வைக்குமாறு பலவேறு தரப்பினரும் வலியுறுத்த வந்தமை குறிப்பிடத்தக்கது.