சொய்சாபுர ஹோட்டல் உரிமையாளர் கொலை ; காரின் சாரதி போதைப்பொருளுடன் கைது

Sri Lanka Police Colombo Crime Drugs Arrest
By Sahana Oct 29, 2026 07:39 AM GMT
Report

கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் சாரதி லுனாவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 மில்லியன் ரூபாய் முதலீட்டு விவகாரம் ; நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

15 மில்லியன் ரூபாய் முதலீட்டு விவகாரம் ; நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் களனி - பட்டிய சந்தியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார்.

கல்கிஸ்ஸை பிராந்திய பொறுப்பதிகாரி தலைமையிலான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் பணிப்புரைக்கு இணங்க, பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

சொய்சாபுர ஹோட்டல் உரிமையாளர் கொலை ; காரின் சாரதி போதைப்பொருளுடன் கைது | Murder Soysapura Hotel Owner Car Driver Arrested

கடந்த 20 ஆம் திகதி சொய்சாபுர பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை மோட்டார் வாகனத்தில் வந்த மூவர் சுட்டுக்கொன்றிருந்தனர்.

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவான அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான 'ரத்மலானே குடு அஞ்சு' என்பவரின் நெருங்கிய ஆதரவாளரான ஜயவர்தன கோட்டகே ரூவன் குமார என்பவரே வெளிநாட்டில் இருந்து இச்சம்பவத்தைக் திட்டமிட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இக்குற்றச் செயலைத் திட்டமிடுவதற்காக அவர் இதற்கு முன்னர் ஒருமுறை நாட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

ரூவன் குமார வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, குறித்த சந்தேகநபர் குற்றச் செயலுக்கு முந்தைய நாள் ஹோமாகம பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றின் வாகன நிறுத்தத்திற்குச் சென்றுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் மின்கலன் (Battery) பழுதாகியிருந்ததால், அன்றைய தினம் குற்றச் செயலை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.

இதற்காக ரூவன் குமார, சந்தேகநபரின் உறவினர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு 100,000 ரூபா பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுநாள், அதாவது 20 ஆம் திகதி, பேலியகொடை பகுதியில் இருந்து மீண்டும் ஹோமாகமவிற்கு வந்த சந்தேகநபர், போலியான இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்த குறித்த மோட்டார் வாகனத்தில் கொட்டாவை மற்றும் பிலியந்தலை ஊடாக மொரட்டுவை, கட்டுபெத்த பகுதிக்குச் சென்றுள்ளார்.

பின்னர், கட்டுபெத்த நடைபாதை அருகே துப்பாக்கிதாரியும் மற்றொரு நபரும் துப்பாக்கியுடன் அந்த மோட்டார் வாகனத்தில் ஏறியுள்ளனர்.

பின்னர் அவர்கள் சொய்சாபுர பகுதிக்குச் சென்று குறித்த ஹோட்டல் உரிமையாளரைச் சுட்டுக்கொன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றச் செயலைத் தொடர்ந்து, ரூவன் குமார, சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு மேலும் இரண்டு இலட்சம் ரூபா பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 'மோதர நவீன்' மற்றும் 'வெல்லே சாரங்க' போன்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர் எனப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (29) மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை ; கடற்றொழிலாளர்கள் அவதானம்

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை ; கடற்றொழிலாளர்கள் அவதானம்

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US