பெலியத்தை கொலையில் சிக்கிய நபர்
பெலியத்தை பிரதேசத்தில் ஐவரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெலியத்தவில் ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் வைத்து அவர் இன்று புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தின் சாரதி கைது
கைது செய்யப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் சாரதி எனவும், இவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொலை சந்தேக நபர்களை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மேலதிகமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் உதவவுள்ளதாக பொலிஸார் கூறினர்.