ஒத்துழைப்பு வழங்கினால் பெரும் தொகை பணப்பரிசு; பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு!
இலங்கைப் பொலிஸாரின் யுக்தியவுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் பெரும் தொகை பணப்பரிசு வழங்ப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்ற தகவல் அளிப்பவர்களுக்கு பண வெகுமதிகளை வழங்க பொலிஸ் தீர்மானித்துள்ளது.
பண வெகுமதிகள்
இதன்படி, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பான பணிப்புரைகளை விடுத்துள்ளார். அவ்வாறான தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பண வெகுமதிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1) தானியங்கி துப்பாக்கிகள் (T56, AK47, M16, SAR80, T81 மற்றும் ஏனையவை) – சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.250,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.250,000 வழங்கப்படும்.
2) அரை தானியங்கி துப்பாக்கிகள் (கைத்துப்பாக்கி 84S, SLR, Auto Loading Shot Guns மற்றும் ஏனைய அரை தானியங்கி துப்பாக்கிகள்) சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.250,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.250,000 வழங்கப்படும்.
3) ரிவால்வர் ஆயுதங்கள் சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.150,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.100,000 வழங்கப்படும்.
4) ரிபீடர் துப்பாக்கிகள் சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.50,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.25,000 வழங்கப்படும்.
5) வெளிநாட்டு துப்பாக்கிகள் சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.15,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.10,000 வழங்கப்படும்.
6) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.25,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.15,000 வழங்கப்படும்.
7) உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் சந்தேக நபருடன் ஆயுதங்கள் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.15,000, சந்தேக நபர் இன்றி ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்படும் போது தகவல் வழங்குவோருக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.