அண்ணன் - அண்ணிக்கு தம்பி நிகழ்த்திய கொடூரம் ; தன்னைத்தானே வெட்டி சிதைத்து நாடகம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அண்ணன் - அண்ணியை தம்பியே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்த தம்பதி. ஆந்திராவில் வீடு எடுத்து தங்கி, முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளனர். தேர்தலில் வாக்களிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பாகவே ஆந்திராவில் இருந்து மதுரைக்கு வந்துள்ளனர்.

சரமாரியாக வெட்டு
இதையறிந்த பழனியின் தம்பி, மது போதையில் கையில் அரிவாளுடன் அண்ணன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அவரது அண்ணியை சரமாரியாக வெட்டியுள்ளார்.அவரது அண்ணன் பழனியையும் வெட்டி படுகொலை செய்தார்.
அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத சுப்பிரமணி, தனது கால் மற்றும் தலை பகுதியில் தனக்கு தானே வெட்டிக் கொண்டு அவரும் அந்த பகுதியிலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா பொலிஸ் நிலைய பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட கணவன், மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இரட்டை கொலைக்கான காரணமும் தெரியவந்துள்ளது. பழனிக்கும் அவரது தம்பி சுப்பிரமணிக்கும் இடையே குடும்ப சொத்தை பிரிப்பதில் அண்ணன் - தம்பிக்கு இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டுள்ளது.
இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் மது அருந்தி வந்து இருவரையும் வெட்டி கொலை செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.