குடும்ப தகராறில் பறிபோன உயிர்
கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (28) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார்.
உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், சகோதரியின் மகன் மன்னாக் கத்தியால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.