நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்து: பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
முந்தல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் பகல் 2.00 மணியளவில் மங்களவெளி - சின்னப்பாடு பிரதான வீதியின் கொத்தாந்தீவு மையவாடிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
கொத்தாந்தீவு மையவாடிக்கு முன்னால் மோட்டார் சைக்கிலும் மஹிந்திரா ரக ஜீப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த பெண் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முந்தல் மாவட்ட. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , உடப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.