பெண் சிங்கம் என்ற பட்டத்துடன் மும்பையை வளம் வரும் DCP அம்பிகா பற்றிய சுவாரஸ்ய தகவல்
பெண் சிங்கம் என்ற பட்டத்துடன் மும்பையை வளம் வரும் உயர் பொலிஸ் அதிகாரி அம்பிகா எனும் வீரத் தமிழச்சி தொடர்பில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடும்ப வறுமையின் காரணமாக 14 வயதில் திருமணம் செய்து கொண்டார் அம்பிகா. 18 வயது அவதற்குள் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றார். இவரது கணவர் ஒரு பொலிஸ் அதிகாரி.
இந்நிலையில் ஒரு நாள் குடியரசு தினத்தன்று கணவர் அணி வகுப்பை காணச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒருவருக்கு கணவர் சல்யூட் அடித்துள்ளார். அப்போது ஏங்க அந்த நபருக்கு நீங்க சல்யூட் அடிச்சீங்க என அம்பிகா கேட்டுள்ளார். கணவர் அதற்கு அவர் ஒரு உயர் பொலிஸ் அதிகாரி (DCP) என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாருக்கும் தெரியாமல் அம்பிகா 10th +2 டிகிரி படிப்புக்களை முடித்தார். பின்னர் UPSC தேர்வெழுதி DCP அதிகாரி ஆனார். உயர் அதிகாரியான அம்பிகாவிற்கு அவரது கணவர் முதல் சல்யூட் அடித்துள்ளார்.