பொலிசார் பாதுகாப்புடன் கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; குழப்ப வந்த கூட்டம் விரட்டியடிப்பு

Sri Lanka Police Colombo Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples
By Sulokshi May 18, 2024 05:51 PM GMT
Report

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூன்றாவது ஆண்டாகவும் இன்று சனிக்கிழமை (18 ) கொழும்பில் நடைபெற்றது.

இறுதிப்போரில்    உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வுகள் வட, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.

பொலிசார் பாதுகாப்புடன் கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; குழப்ப வந்த கூட்டம் விரட்டியடிப்பு | Mullivaikal Remember In Colombo Police Protection

பொலிசார் பாதுகாப்பு

அதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் எனவும், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த போராட்டங்களின் தளமாக அமைந்திருந்த காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் 2022 மே 18 ஆம் திகதியன்று இன, மதபேதமுமின்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுட்டித்து போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.

பொலிசார் பாதுகாப்புடன் கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; குழப்ப வந்த கூட்டம் விரட்டியடிப்பு | Mullivaikal Remember In Colombo Police Protection

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

அதன்படி, இம்முறையும் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது.

பொலிசார் பாதுகாப்புடன் கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; குழப்ப வந்த கூட்டம் விரட்டியடிப்பு | Mullivaikal Remember In Colombo Police Protection

இந்நிகழ்வில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான ஷ்ரீன் ஸரூர், சுவஸ்திகா அருலிங்கம், சந்தியா எக்னெலிகொட, ராஜ்குமார் ரஜீவ்காந்த், கௌதமன், ரத்னவேல், நுவன் போபகே உள்ளிட்ட பலரும், கத்தோலிக்க மதகுருமாரும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஆதரவு; முடங்கியது கிளிநொச்சி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஆதரவு; முடங்கியது கிளிநொச்சி

காலை 9.30 மணியளவில் அங்கு கூடியிருந்த அனைவரும் ஈகைச்சுடரேற்றி, அதில் வெண்ணிற மலர்தூவி போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர்.

பொலிசார் பாதுகாப்புடன் கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; குழப்ப வந்த கூட்டம் விரட்டியடிப்பு | Mullivaikal Remember In Colombo Police Protection

நினைவேந்தலை குழப்ப வந்த கூட்டம்

இந்நினைவுகூரல் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு குழுவொன்று கொடிகளை ஏந்தி கூச்சலிட்டவாறு கடற்கரைப்பகுதிக்குள் உட்பிரவேசித்து நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க முற்பட்ட வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரால் அவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர்.

பொலிசார் பாதுகாப்புடன் கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; குழப்ப வந்த கூட்டம் விரட்டியடிப்பு | Mullivaikal Remember In Colombo Police Protection

தொடர்ந்து நிகழ்வை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறும், தாமதமேற்படின் அதன் பின்னர் நிகழக்கூடியவற்றுக்குத் தம்மால் பொறுப்புக்கூறமுடியாது எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணி ரத்னவேலிடம் எச்சரித்தார்.

பொலிசார் பாதுகாப்புடன் கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; குழப்ப வந்த கூட்டம் விரட்டியடிப்பு | Mullivaikal Remember In Colombo Police Protection

இக்குழப்பங்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்தியா எக்னெலிகொட, மிலானி மற்றும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் ஆகியோர் உரையாற்றி இருந்தனர். இதன்போது அவர்கள் கூறுகையில் ,

முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்ட ஊர்தி ; பொலிஸார் கெடுபிடி

முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்ட ஊர்தி ; பொலிஸார் கெடுபிடி

போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரவேண்டியதன் தேவைப்பாட்டையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிப்பேசினர்.

பொலிசார் பாதுகாப்புடன் கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; குழப்ப வந்த கூட்டம் விரட்டியடிப்பு | Mullivaikal Remember In Colombo Police Protection

வட, கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகிப்பதற்கும், உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கும் தடைவிதிக்கப்பட்டு, இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டமை குறித்து தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.

பொலிசார் பாதுகாப்புடன் கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; குழப்ப வந்த கூட்டம் விரட்டியடிப்பு | Mullivaikal Remember In Colombo Police Protection

அதன்பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளை மலர்களை கடலில் தூவி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். நினைவேந்தல் நிகழ்வுக்கு சற்றுத் தாமதமாக வருகைதந்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான மிராக் ரஹீம் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் தண்டவாளத்துக்கு அண்மையிலேயே பொலிஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.     

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US