முல்லைத்தீவு இளைஞனின் சமூக பிரழ்வான செயலால் யுவதி வைத்தியசாலையில்!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி கிராமம் ஒன்றில் ஆலய திருவிழாவில் கலந்துகொண்ட யுவதியிடம் தொலைபேசி இலக்கத்தினை பெற்று யுவதியினை இளைஞன் அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதியின் பெற்றோர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு நேற்று( 08.08.2023) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளைஞனுக்கு விளக்கமறியல்
குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று ( 09.08.2023) முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |