முல்லைத்தீவில் நபர் ஒருவர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள்
முல்லைத்தீவில் உள்ள பகுதி ஒன்றில் வைத்து ஒரு கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்கைது சம்பவம் இன்று (01-02-2022) செவ்வாய்க்கிழமை காலை முல்லைத்தீவு - செம்மலை வீதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் முல்லைத்தீவு மாத்தளன் சாலைப் பகுதியில் கடற்தொழில் செய்பவர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு கிலோ கிராம் எடைகொண்ட கஞ்சா பொதியினை முல்லைத்தீவு மாஞ்சோலை பகுதியிலிருந்து திருகோணமலைக்கு உந்துருளியில் கொண்டு சென்ற வேளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய செம்மலைப்பகுதியில் சந்தேகத்தில் மறித்துச் சோதனை செய்த போது கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கஞ்சா பொதியும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.