ராஜபக்க்ஷ அழைப்பை புறக்கணித்த எம் பிக்கள்!
ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை எனத் தெரியவருகிறது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்டபோதும், பெருமளவிலான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் பங்கேற்கவில்லை எனத் தெரியவருகிறது.
அதேசமயம் சிலர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என முன்கூட்டியே தெரிவித்ததாகவும், ஆனால் சிலர் அவ்வாறான அறிவிப்பைக் கூட வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, பயனற்ற பேச்சு வார்த்தைக்காக ஆளும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.