மட்டக்களப்பில் பெண்கள் இருவரின் மோசமான செயல்
மட்டக்களப்பு, காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தில் 2700 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .
காத்தான்குடி பொலிஸார் (03) இரவு நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 2700 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை ஆரையம்பதி செல்வாநகர் கடற்கரை வீதியில் 2500 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் 23 வயது பெண் ஒருவரும், காத்தான்குடி பிரதேசத்தில் 6000 மில்லி கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 35 வயதுடைய பெண்ணொவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட இரு பெண் போதைப்பொருள் வியாபாரிகளும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.