மஹிந்தவை மைனா என அழைக்கப்படுவதற்கான காரணத்தை வெளியிட்ட எம்.பி!
இலங்கை அரசியல் வட்டாரங்களில் மைனா எனும் செல்லப்பெயரில் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) அழைக்கப்படுவதற்கான காரணத்தை அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன (S M Chandrasena) வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சிலர் மைனா' அல்லது 'நாகி மைனா' என அழைப்பதாகவும், அவருக்கு வயதாகியமையினால் இவ்வாறு அழைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு வயதாகி இருந்தாலும், அவரின் தலைமைக்கு வெளியே எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என அனுராதபுரம் பகுதியினை சேர்ந்த மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விட மொட்டு பாரியளவில் வெற்றி பெறும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.